Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-naga-chaitanya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தாவை கதற கதற அழவைத்த சம்பவம்.. அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு

திருமணம், விவாகரத்து, காதல் பிரிவு இவை அனைத்தும் சாதாரணமாக அனைவரது வாழ்விலும் நடக்கும் விஷயங்கள் தான். ஆனால் ஒரு நடிகையின் வாழ்வில் நடந்தால் மட்டும் ஏன் அதை மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றுகிறோம் என்பதுதான் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்த சம்பவத்தில் நடிகரை விட ஒரு நடிகை அதாவது பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா விவாகரத்து குறித்து வெளியாகும் வதந்திகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளாராம். சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்த காரணங்களால் தான் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளால் பாதிக்கப்பட்ட சமந்தா அந்த வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அதன்படி சமந்தா கூறியுள்ளதாவது, “எனது திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது குறித்து என் மீது அக்கறை காட்டும் அதே நேரத்தில் உண்மைக்கு மாறான பொய்யான கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வதந்திகளுக்கு எதிராக என்னை பாதுகாக்க என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற்று தர மறுத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி மற்றும் கருவை கலைத்தேன் என பல வதந்திகள் வந்தன.

பிரிவு எனக்கு மிகுந்த வலியை அளித்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் வேண்டும். இதிலிருந்து நான் என்னை பாதுகாத்து கொள்வேனே தவிர ஒருபோதும் நான் உடைந்து விடமாட்டேன்” என மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். ஒருவரின் சொந்த வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட்டு தேவையில்லாத கருத்துக்களை பேசி இவ்வாறு அவர்களை காயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

samantha-twit-1

samantha-twit-1

சமந்தா மற்றும் நாக சைதன்யா என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்தார்கள் என சோசியல் மீடியா, யூடியூப் சேனல் என எங்கு பார்த்தாலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்து கொண்டால் என்ன? நாட்டிற்கு இது மிகவும் அத்தியாவசிய பிரச்சனையா? அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து கமெண்ட் செய்ய நாம் யார் என பலரும் சமந்தாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Continue Reading
To Top