புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

மூன்று வருடத்திலேயே கசந்த திருமணம்.. காதல் கணவரை கழட்டிவிட போகும் சமந்தா

உச்சத்தில் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்களது நடவடிக்கைகளில் ஒரு சின்ன மாற்றம் செய்தாலும் அதை ரசிகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். அந்த வகையில் சமந்தா ஊரறிய செய்த மாற்றம் ஒன்று சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சமந்தாவிடம் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் ஆன நிலையிலும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

இதுகுறித்து பலமுறை பல பேர் சமந்தாவிடம் கேள்வி கேட்டு அவரை கடுப்பாக்கினர். தற்போதைக்கு தன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக கூறியிருந்த சமந்தா சமீபத்தில் தன்னுடைய பெயரில் இருந்த கணவர் பெயரை நீக்கி விட்டார்.

இது குறித்து விசாரிக்கையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எனவும், மேலும் சமந்தாவின் நடவடிக்கைகள் எதுவும் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதால் விரைவில் இருவரும் பிரியப்போகிறார்கள் என்ற செய்தி வேகமாக பரவியது. அதுவும் சமீபத்தில் வெளிவந்த த ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிஸ் தொடரில் சமந்தா அநியாயத்திற்கு மோசமான காட்சிகளில் நடித்தது நாக சைதன்யா குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்து விட்டதாம்.

ஆனால் இதுகுறித்து சமந்தாவும் சரி, நாக சைதன்யா குடும்பத்தினரும் சரி வாய் திறக்கவில்லை. இருந்தாலும் சினிமா வட்டாரங்களில் சும்மா இருப்பார்களா, இஷ்டத்திற்கு கொளுத்திப் போட்டு விட்டனர்.

தற்போது சமந்தா கமர்சியல் படங்களை தவிர்த்து விட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெப்சீரிஸ் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

samantha-naga-chaitanya-cinemapettai
samantha-naga-chaitanya-cinemapettai
- Advertisement -spot_img

Trending News