Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-amala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வளையோசை பாடலை வைத்து சமந்தா, அமலாவை வச்சு செய்த நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்

தமிழ் சினிமா முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல 2 காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்து வருகின்றனர். இருவரும் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் பேருந்தில் எடுக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதே பேருந்து காட்சியில்தான் இவரது மாமியார் ஆன அமலா கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருப்பார். அதுவும் வளையோசை கலகலவென பாடல் அப்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தாவுக்கு பேருந்துகள் நடித்துள்ளதால் நெட்டிசன்கள் அதனை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.

அமலாவைத்து நாகர்ஜுனாவையும் சமந்தாவை நாகசைதன்யாவையும் கிண்டல் செய்துள்ளனர். மேலும் சமீபகாலமாக சமந்தா நாக சைதன்யாவுடன் சண்டையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது சமந்தா சேர்ந்த காட்சி நடித்துள்ளதால் இவர்கள் சண்டை மிகப்பெரிதாக எனவும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவருமே இணைந்து கோவாவில் புதிதாக வீடு வாங்கியுள்ளது பார்க்கும்போது இவர்கள் இன்னமும் காதலில்தான் உள்ளார்கள் என்பது தெரிகிறது.

samantha meme

samantha meme

ஆனால் சினிமாவில் இதெல்லாம் சகஜம் அதனால் இதனையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். சமந்தா தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளன.

nayanthara-samantha-video

nayanthara-samantha-video

Continue Reading
To Top