தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சமுக வலைத்தளங்களில் தீயாக பரவும் 'தெறி' படத்தின் கதை

இதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து இவர்களது திருமணம் டிசம்பரில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஆனால் நடிகை சமந்தா தனது திருமணம் டிசம்பரில் நடைபெறாது என டிவிட்டரில் நேற்று அறிவித்துள்ளார்.