தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா(samantha). இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர்.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டுவிட்டார். அதிலும் குறிப்பாக தளபதி விஜய்யுடன் மூன்று படங்களில் நடித்து தமிழில் உச்ச நடிகையாக வலம் வந்தார்.
தற்போது சமந்தாவுக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. திருமணத்திற்கு பிறகும் ஒரு நடிகைக்கு இவ்வளவு படவாய்ப்புகள் குவிவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
பெரும்பாலும் நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து நடிகர்களுடன் ரொமான்ஸ் பண்ணுவதை குறைத்துக் கொள்வார்கள். அதற்கு காரணம் வீட்டில் பிரச்சனை வரும் என்பதால் தான்.
ஆனால் சமந்தா அப்படியே நேரெதிராக உள்ளார். திருமணத்திற்கு பிறகு அதிக அளவு கவர்ச்சி காட்டுவது, நடிகர்களுடன் ரொமான்ஸ் பண்ணுவது என அனைத்திலும் கலந்துகட்டி இளம் நடிகைகளுக்கு சவால் விட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எந்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ண ஆசை? என கேட்டதற்கு, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சியாக இருந்தாலும் நடிக்க தயார் என கூறியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையெல்லாம் கேட்டுவிட்டு எப்படித்தான் நாக சைதன்யா அமைதியாக இருக்கிறாரோ என்கிறார்கள் சினிமா வாசிகள்.