Connect with us
Cinemapettai

Cinemapettai

இது உங்க சின்ன வயசுல எடுத்த டிரெஸ்.? தொடை தெரிய வைரலாகும் சமந்தாவின் பார்ட்டி புகைப்படம்

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது உங்க சின்ன வயசுல எடுத்த டிரெஸ்.? தொடை தெரிய வைரலாகும் சமந்தாவின் பார்ட்டி புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் சமந்தாவிற்கு நாளுக்கு நாள் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பொதுவாக நடிகைகளுக்கு திருமணமானாலோ, அல்லது வயதாகிவிட்டாலோ பெரிய அளவிலான பட வாய்ப்புகள் வருவதில்லை. ஆனால் சமந்தாவிற்கு திருமணத்திற்குப் பின்னர் தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமந்தாவும் திருமணத்திற்கு பிறகு தான் அதிக அளவில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

சாதாரணமாக ஹீரோவுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களாக அல்லாமல், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து சமந்தா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

சமந்தா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

படங்களில் மட்டும் அல்லாமல் சோசியல் மீடியாக்களிலும் அடிக்கடி தனது ரசிகர்களுக்கு தரிசனம் காட்டி வருகிறார் சமந்தா. தனது அழகான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் என எப்போதும் ஏதாவது ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தோழி ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தோழியுடன் குட்டையான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது உங்க சின்ன வயசுல எடுத்த டிரஸா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

samantha

samantha

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top