Videos | வீடியோக்கள்
காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் இணைந்த சமந்தா.. விக்னேஷ் சிவனுடன் சேட்டை செய்யும் வைரல் வீடியோ
ஒருவழியாக மூன்று வருடம் கழித்து படம் இயக்க தயாராகிவிட்டார் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்த முறை காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் சமந்தாவும் இன்னொரு ஹீரோயினாக இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதி இளமையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள புகைப்படம் செம வைரல்.
முதலில் சமந்தா, நயன்தாராவின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக விக்னேஷ் சிவன் உடன் சண்டை போட்டதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை ஸ்வீட்டான வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் சமந்தா விக்னேஷ் சிவனிடம், ஒழுங்கா படம் எடுத்து விடுவீர்களா? என்று கேட்டதற்கு, விக்னேஷ் சிவன் சிரித்துக்கொண்டே பார்ப்போம் என ஜாலியாக கூறிய அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் லட்சக்கணக்கில் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
நானும் ரவுடிதான் படத்தைப் போலவே இந்தப் படமும் பெரிய வெற்றிப் பெறும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கூட்டணியை பார்த்தவுடனேயே வெற்றி என்பது, வெறும் கையில் முழம் போடும் கதையாகத் தான் இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
