Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் சமந்தாவின் ஜிம் ஒர்கவுட்
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர், தற்பொழுது சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருவது சமந்தாவின் ஒர்கவுட் வீடியோ தான், இவர் கடந்த வாரம் வெளியாகிய இரும்புத்திரை படத்தில் மருத்துவராக நடித்திருப்பார்.
சினிமாவில பல நடிகைகள் தனக்கு மார்கெட் இல்லைஎன்றால் திருமணம் செய்துகொள்வார்கள், ஆனால் நடிகை சமந்த கொஞ்சம் வித்தியாசமாக தனது மார்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார், இவர் சினிமாவில் வந்த பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் தனது உடலை இளமையாக வைத்துள்ளார், இவ்வளவு பிசியான நேரத்திலும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனது உடற்ப்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் கலோரியை குறைப்பதற்காகவே உடற்பயிற்சி செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார், இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இதற்கு முன் ஒரு முறை வெளியிட்டுள்ளார் ஆனால் இந்த வீடியோ இணையதளத்தில் தாறுமாறாக பரவி வருகிறது.
