fbpx
Connect with us

Cinemapettai

நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ கீட்டோ எடுக்கற வேல எல்லாம் வெச்சிக்காத.. எச்சரித்த சமந்தா வீடியோ

samantha-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ கீட்டோ எடுக்கற வேல எல்லாம் வெச்சிக்காத.. எச்சரித்த சமந்தா வீடியோ

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நம்பர்-1 நாயகியாக வலம் வருவது சமந்தா மட்டுமே.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜானு படம் சமந்தாவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக ஜானு படம் உருவாகியது.

இந்த படத்தில் சர்வானந்த் ஜோடியாக சமந்தா நடித்தார். படம் வெளியான போது இருந்த வரவேற்பு அதன்பிறகு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் ஜானு படம் சறுக்கலை சந்தித்ததாக தெரிகிறது. இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சமந்தா.

தன்னுடைய படம் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார் சமந்தா. அப்படி செல்லும்போது அவரது ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் தொடர்ந்து அவர்களை வீடியோ எடுப்பதை சமந்தா கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது ,நடந்தா ஒழுங்கா நட, இப்படிக்கு போட்டோ கீட்டோ எடுக்கிற வேலையெல்லாம் வெச்சுகாதே என ரசிகரை எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top