Photos | புகைப்படங்கள்
கவர்ச்சியுடன் களைக்கட்டிய சமந்தாவின் முதல் திருமணநாள்.! வைரலாகும் புகைப்படம்
திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் சினிமாவில் இருந்து காணாமல் போய் உள்ளார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை சமந்தா, ஆனால் தற்போது எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.

samantha
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா மற்றும் நாக சைதன்யா, இவர்கள் என்னதான் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் இருவரும் நெருக்கமாக இருக்கிறோம் என்று அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு நிரூபித்து வருவார்கள்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் குரோசியாவிலுள்ள டர்போனிக் நகரில் தங்களது முதல் திருமண வருடத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அதுவும் குடும்பத்துடனும், இவர்கள் இருவரும் சுற்றுலா சென்றால் தனியாக தான் செல்வார்கள் ஆனால் இந்த முறை தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்கள்.

samantha
மேலும் சமந்தா நாக சைதன்யா இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில் ஒன்று நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்கிறேன் முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் நாகசைதன்யா எனக் குறிப்பிட்டுள்ளார்,
மேலும் ரசிகர்களுக்கு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

samantha

samantha

samantha
