கணவருடன் விவாகரத்து சர்ச்சை.. நாயுடன் ஒப்பிட்டு பதிலடி கொடுத்த சமந்தா

கடந்த சில வாரங்களாகவே சமூக வளைதளத்தில் நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்திகள்தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்பம் குட்டி என செட்டிலாகாமல் தொடர்ந்து சமந்தா படங்களில் நடித்து வருகிறார்.

சாதாரணமாக நடித்தாலும் பரவாயில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் அநியாயத்திற்கு மோசமான உடைகள் அணிந்து படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் மற்ற நடிகர்களுடன் எனும் நெருக்கங்கள் அதிகம் காட்டி வருகிறார்.

சினிமாவில் இது சகஜம்தான் என்றாலும் நாகசைதன்யா குடும்பத்தினருக்கு இது கொஞ்சம் கவலையை கொடுத்துள்ளதாம். இதனால் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா சமந்தாவை எச்சரித்ததாகவும் ஆனால் சமந்தாவை கண்டுகொள்ளாததால் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை எனவும் கூறுகின்றனர்.

இதனால்தான் சமந்தா சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து தன்னுடைய குடும்பத்தின் பெயரை நீக்கிவிட்டு விரைவில் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்வார் என எதிர்பார்க்கின்றனர் சிலர். ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் சமந்தா.

சமந்தா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டி குறைக்கும்படி ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார். அது தேவையில்லாமல் வதந்திகளுக்கு மீடியாக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது.

samantha-cinemapettai
samantha-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்