Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவாகரத்தில் சிக்கியுள்ள சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. டோலிவுட்டில் கசிந்த ரகசியம்
தமிழ் நடிகைகளின் வரிசையில் கொடிகட்டி பறக்கும் சமந்தா தனது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளுடன் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இது விவாகரத்து வரை சென்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா கடைசியாக நடித்த வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமந்தா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.
இவர் நாகா அர்ஜுனனின் மகனான நாகா சைத்தானை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா சில நாட்களாக அவர்களின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்வது இல்லையாம். சமீபத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம் கூட கலந்து கொள்ளவில்லை.
இதனை வைத்து பார்க்கும் போது அவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமை உள்ள நடிகைகள் வெளி உலகத்திற்கு வரும்போது தங்களது குடும்ப வாழ்க்கையை சரி செய்து கொள்வது மிகவும் கடினம் தான்.
இதற்காக தான் சாதனை படைத்த பல பெண்கள் திருமணம் கூட செய்து கொள்வதில்லை, இதற்கு நமது லேடி சூப்பர்ஸ்டார் ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
வாழ்க்கையில் எல்லோரையும் சந்தோஷ படுத்துவது என்பது மிகவும் கடினம். இந்த விவாகரத்து அவர்களே ஒப்புக் கொண்டால்தான் முழு விவரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
