Connect with us
Cinemapettai

Cinemapettai

சமந்தா வைத்த செக், தடுமாறும் விக்னேஷ் சிவன்.. ஆரம்பமே அதகளம்!

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தா வைத்த செக், தடுமாறும் விக்னேஷ் சிவன்.. ஆரம்பமே அதகளம்!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ஏற்கனவே விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய விக்னேஷ் சிவன் இந்த படத்தையும் இயக்குகிறார். இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் தான் விக்னேஷ்சிவன், விஜய் சேதுபதி நேரில் பார்த்து பூக்கொத்து கொடுத்து விளம்பர படுத்தினர். அதனை வாங்கிய விஜய் சேதுபதி பூ கொத்தை விளையாட்டாக மீண்டும் விக்னேஷ் இடம் தூக்கி போட்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் சமந்தாவை நேரில் சந்தித்தும் பூங்கொத்தை கொடுத்துள்ளார் அந்த வீடியோவும் வைரலானது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியான நயன்தாராவும், சமந்தாவும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் சமந்தா தற்போது விக்னேஷ் சிவனிடம் ஒரு நிபந்தனையை வைத்துள்ளார். அது என்னவென்றால் தான் கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய  காட்சிகளை முதலில் எடுத்து விடுங்கள் என விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த நிபந்தனையை ஏற்ற விக்னேஷ் சிவன் சமந்தாவின் படக்காட்சிகளை முதலில் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து நடிக்கும் காட்சிகளால் விக்னேஸ் சிவனுக்கு சற்று சறுக்கல் ஏற்பட்டு உள்ளது.

இரண்டு பிரபல நடிகைகளை ஒரே திரையில் காண்பிப்பது அவ்வளவு சாத்தியமல்ல, இதனால் பல ஈகோ பிரச்சனைகளை விக்னேஷ் சிவன் சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top