புதன்கிழமை, நவம்பர் 13, 2024

பண போதை பிடித்து தெளிந்த சமந்தா.. செகண்ட் ரவுண்டாவது கண்ணியமா இருக்குமா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் போது நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் சமந்தா தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தமிழில் 2018 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் தமிழை விட தெலுங்கு படங்களில் அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. அதோடு அவர் அதிக கிளாமராகவும் நடிப்பதால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

இதனால் அவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை மறந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த வருடம் சமந்தா, விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.

இந்தப் பாடலுக்கு மட்டும் அவர் பல கோடி சம்பளமாக பெற்றார். அதோடு அவர் ஹாலிவுட், பாலிவுட் மொழிகளிலும் படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.  இதனால் திரையுலகில் பலரும் அவர் பணத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பேசி வந்தனர்.

இந்நிலையில் சமந்தா மீண்டும் தமிழ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். நடிகர் கார்த்தியுடன் அவர் முதன்முதலாக ஜோடி சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை பேச்சுலர் பட இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்க இருக்கிறார். சமந்தா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News