“சமந்தா ‘கீர்த்திசுரேசை’ பத்தி…என்ன சொல்லப்போறாரா?”

நாக் அஸ்வின் இயக்க, சமந்தாவும், கீர்த்தி சுரேஷும் நடிக்க உருவாகப்போகும் படம் மகா நதி. இது நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கப்போகிறார்.

தமிழ்,தெலுங்கு என்று இரண்டு மொழியில் உருவாகப்போகும் இந்த படத்திற்கு அம்மணி வாங்கியிருக்கும் சம்பளம் 3 கோடியாம்.

இதுவரை எல்லாம் ஓகே, ஆனால், சமந்தா ரோலை பற்றித்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள். அவர் ஜெமினி கணேசனின் முதல் மனைவியாக நடிக்கப்போகிறார் என்றார்கள்.

இப்போ ஒரு தகவல்…

சமந்தா ஒரு ஜர்னலிஸ்ட், அதாங்க  ஒரு பத்திரிக்கையாளர். அவர் தான் சாவித்திரி கதையை படத்தில் நமக்கு சொல்லுகிறார்.

அதுக்குள்ளே கீர்த்தி சுரேஷை சாவித்திரியா ஏத்துக்கமாட்டோம்ன்னு ஒரு தகராறு அந்தப்பக்கம் ஓடிக்கிட்டு இருக்கு.

இது இல்லாமல் பிரகாஷ் ராஜ் மற்றும் அனுஷ்க்கா வேறு இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

Comments

comments