Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தா தொழில் பக்தி இருக்கலாம் ஆனா இப்படியா?

நடிகை சமந்தா மாமனார் – மாமியாரின் 25வது கல்யாண விருந்திலேயே கலந்து கொள்ளாமல் தவிர்த்து இருக்கும் காரணம் குறித்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Samantha

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2007இல் ரவி வர்மன் இயக்கத்தில் மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் என்றாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசாவேயே படம் தான் அவருக்கு மிகப்பெரிய ப்ரேக்கை கொடுத்தது. தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் புகழ் பெற்று, கோடிகளில் சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். ஒரு பக்கம் தன் நடிப்பு துறையில் பிஸியாக இருக்கும் சமந்தா, சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். பிரதியூஷா என்ற பெயரில் என்.ஜி.ஓ ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம், தன் சம்பளத்தின் பெரும் பகுதியை தேவையானவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சமந்தா தன் நீண்டநாள் காதலரான நாக சைதன்யாவை கடந்த வருடம் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்கள் திருமணம் இரு மத முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சமந்தாவிற்கு மார்க்கெட்டில் தொய்வு இல்லாமல் தொடர் வாய்ப்புகளால் பிஸியாக தான் வலம் வருகிறார்.

Samantha

இந்நிலையில், அவரின் மாமனார் நாகர்ஜூனா மற்றும் மாமியார் அமலா இருவருக்கும் 25வது திருமண நாளை ஹைதராபாத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில், மூத்த மகன் நாக சைதன்யா, இளைய மகன் அகில் உள்ளிட்ட நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், திருமணத்திற்கு பிறகு நடக்கும் முதல் குடும்ப நிகழ்வில் சமந்தா கலந்து கொள்ளவில்லை. இது அகில் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டது. இத்தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு வேளை இருவருக்கும் சண்டையா எனக்கூட யூகங்கள் பட்டையை கிளப்பின. ஆனால், அப்படி எதுவுமே இல்லையாம். சமந்தா பல படப்பிடிப்பில் இருப்பதாலேயே, நிகழ்ச்சியை மிஸ் செய்து இருக்கிறார். முன்னதாக, திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் ஷூட்டிங் சென்றவர் சமந்தா என்பதால் இதெல்லாம் சாதாரணமப்பா என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top