கடைசி வரைக்கும் இப்படியே சாகப் போறாங்க.. எக்குத்தப்பா பேசியவரை வாயடைக்க வைத்த சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சமந்தா அதன் பிறகு வேறு எந்த தமிழ்த் திரைப்படங்களையும் கமிட் செய்யவில்லை. தெலுங்கில் சாகுந்தலம், யசோதா, குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா விரைவில் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார்.

இதற்காக அவர் சில கதைகளை தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது அதிக நேரத்தை உடற்பயிற்சி செய்வதிலேயே கழித்து வருகிறார்.

அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் சமந்தா தற்போது ஜிம்மில் தன்னுடைய நாயுடன் இருக்கும் போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இன்று அதிகாலையிலேயே எழுந்து விட்டேன் என்று கூறிய அவர் அந்த நாய்க்குட்டியை மிகவும் நேசிப்பதாகவும், இவ்வளவு நாட்கள் இவனை நான் மிஸ் செய்து கொண்டிருந்தேன் என்று பதிவிட்டிருந்தார். அவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அளித்து வந்தனர்.

அதில் ஒரு ரசிகர் இவர் கடைசி வரையிலும் இந்த நாய் மற்றும் பூனை உடனே தனியாக இருந்து சாகப் போகிறார் என்று பதிவிட்டிருந்தார். இப்படி கமெண்ட் செய்த அந்த ரசிகரை வாயடைக்க செய்யும் அளவுக்கு சமந்தா ஒரு பதிலை அளித்துள்ளார். அதாவது, அப்படி ஒரு விஷயம் நடந்தால் நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுவேன் என்று கூறியுள்ளார். சமந்தா கூறிய இந்த பதிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Next Story

- Advertisement -