Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்கு சூப்பர் கேள்வி, ஆனால் அஜித்திற்கு…! சமந்தா கேட்க்க துடிக்கும் கேள்வி.!
சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் நீண்ட காலம் களத்தில் இருக்க முடியாது, ஆனால் அதையும் மீறி ஒரு சில நடிகைகள் தனது திறமையால் இன்னும் நடித்து வருகிறார்கள், அதேபோல் நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே போதும் எந்த படவாய்ப்பும் வராது, என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

samantha
இந்தக் கருத்து பொய்யென நிரூபிக்கும் வகையில் நடிகை சமந்தா திருமணம் ஆகியும் இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார் படம் வந்து கொண்டே இருக்கிறது, இவரது நடிப்பில் வெளியான யூ turn திரைப்படம் திரையரங்கத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.
திரைப்படம் வெற்றி அடைவது சமந்தா சந்தோஷத்தில் இருக்கிறார் இதனால் பல ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார், அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் நீங்கள் அஜித்-விஜய் இடம் என்ன கேள்வி கேட்க நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்கள்.
அதற்கு நடிகை சமந்தா விஜய்யிடம் 15 வருடங்களில் நாளுக்கு நாள் மிகவும் இளமையாக ஆகிக்கொண்டு போகிறீர்களே இதற்கு என்ன சீக்கிரம் என்று கேட்பேன் என கூறினார். அதேபோல் தல அஜித்திடம் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் மக்களுக்கும் அதிகம் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறீர்களே, என்னுடைய கணவரையும் சேர்த்துதான் சொல்கிறேன், இத்தனைக்கும் என் கணவருக்கு உங்களை பற்றி அவ்வளவாக தெரியாது அப்படி இருக்க, இதில் என்ன சீக்ரெட் இருக்கிறது என்று தல அஜித்தை பார்த்து கேட்பாராம்.
