Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகருடன் ஜோடி சேர்வதற்கு தூது விட்ட சமந்தா..

தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி படம் மூலமாக அறிமுகமாகியிருந்தாலும், பானா காத்தாடி, நான் ஈ போன்ற படங்களுக்கு பின்னரே சமந்தா அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கினார். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகளுக்கு திருமணமானாலோ, அல்லது வயதாகிவிட்டாலோ பெரிய அளவிலான பட வாய்ப்புகள் வருவதில்லை. ஆனால் சமந்தாவிற்கு திருமணத்திற்குப் பின்னர் தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமந்தாவும் திருமணத்திற்கு பிறகு தான் அதிக அளவில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் தொடர் பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஹீரோவுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களாக அல்லாமல், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக முதலில் சமந்தாவிடம் தான் பேசப்பட்டதாம்.

prabhas-cinemapettai

prabhas-cinemapettai

ஆனால், ஒரு சில காரணங்களால் சமந்தா இதில் நடிக்க முடியவில்லை. முன்னதாக நாக் அஸ்வின் இயக்கிய நடிகையர் திலகம் படத்தில் சமந்தா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா இதுவரை பிரபாசுடன் எந்த ஒரு படத்திலும் ஜோடியாக நடித்ததில்லை.

இந்நிலையில் நாக் அஸ்வின் படம் குறித்து விளக்கம் அளித்துள்ள சமந்தா, ‘நாக் அஸ்ஹவினிடம் உங்கள் படத்தில் எனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என கேட்கப்போகிறேன். அவர் மறுக்கும் பட்சத்தில், இந்த படத்தில் எனக்கு என்ன ரோல் என கேட்கப்போகிறேன்’ என்றார். இதன்மூலம் சமந்தா இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Continue Reading
To Top