Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சமந்தா கொடுத்த 6 பதிலடிகள்.. சோறு போடும் முதலாளியை வறுத்தெடுத்த சாம்

நடிகை சமந்தா அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஆறு முறை நச்சென்று பதிலடி கொடுத்து வாய் அடைக்க வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களை பொறுத்த வரைக்கும் கொஞ்சம் பிரபலமானாலே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக அவர்கள் மீது வைக்கப்படும். அதுவும் சினிமா பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லா வகையான மோசமான வார்த்தைகளையும், விமர்சனங்களையும் கடந்து தான் வர வேண்டும். ஒரு சிலர் இதுபோன்ற விமர்சனங்களுக்கு கோபப்படுவார்கள் அல்லது எந்த ரியாக்சனும் கொடுக்காமல் கடந்து விடுவார்கள். ஆனால் நடிகை சமந்தா அவருக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஆறு முறை நச்சென்று பதிலடி கொடுத்து வாய் அடைக்க வைத்திருக்கிறார்.

நடிகை சமந்தா சமீபத்தில் மையோசைட்டிஸ் என்னும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது ஒருவர் சமந்தாவின் அழகு போய்விட்டதாக நக்கலாக கமெண்ட் செய்திருந்தார். அதற்கு சமந்தா என்னை போல் எந்த ஒரு நோயும் உங்களை தாக்காமல் இருக்கவும், உங்கள் அழகு மேலும் மெருகேறவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.

Also Read:சமந்தா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் ஆன்ட்டி நடிகை.. 40 வயதிலும் ஐட்டம் டான்ஸ் ஆட இவ்வளவு ஆசையாம்

அதேபோன்று சமந்தா உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தபோது, நெட்டிசன் ஒருவர் , அநாகரிகமான வார்த்தை ஒன்றை உபயோகப்படுத்தி, உன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை சமாளிக்க வலிமை எப்படி கிடைக்கிறது என கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சமந்தா ஏனென்றால் என் கதை இப்படியே முடிவடைந்து விடாது, என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்பதை நான் மட்டுமே முடிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

சமீபத்தில் சாகுந்தலம் படம் சரியாக ஓடவில்லை, இனி சமந்தாவின் நட்சத்திர அந்தஸ்து அவ்வளவுதான், படத்தை ஓட வைக்க மட்டமான யுக்திகளை அவர் பயன்படுத்துகிறார் என்று ஒரு தயாரிப்பாளர் சொல்லி இருந்தார். அதற்கு சமந்தா கூகுளில் ஆண்களுக்கு ஏன் காதில் இருந்து முடி வளர்கிறது என்ற காரணத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சமந்தா அந்த தயாரிப்பாளருக்கு கொடுத்த மறைமுகமான பதிலடி என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

Also Read:குஷ்பூவுக்கு பிறகு சமந்தாவுக்கு கிடைத்த கௌரவம்.. பிறந்தநாளுக்கு இப்படி எல்லாம் செய்வீங்க

நாக சைதன்யா உடனான விவாகரத்திற்கு பிறகு சமந்தா ஏகப்பட்ட கேலிகளுக்கும், நெகட்டிவ் விமர்சனங்களுக்குள்ளும் தள்ளப்பட்டார். நெட்டிசன் ஒருவர் சமந்தா இனி ஒருவர் கையில் இருந்து மாற்றப்பட்ட இரண்டாவது பொருள், மேலும் அவர் சைதன்யாவை பிரிய 50 கோடி வரை பணம் வாங்கி இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு சமந்தா கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும் என்று பதிலளித்திருந்தார்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா, புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ரொம்பவும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். இது பற்றி பல கருத்துக்கள் அவர் மீது திணிக்கப்பட்டாலும், அதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த பாடலின் போட்டோ ஒன்றை பகிர்ந்து நான் எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். கவர்ச்சியாக இருப்பதும் கடின உழைப்பினால் கிடைப்பது தான் என்று சொல்லி இருந்தார்.

சமந்தா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். ஒருமுறை அவர் வி வடிவ நெக்லைன் ஆடை அணிந்ததற்காக பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். அதற்கு பதில் அளித்த சமந்தா இந்த காலத்திலும் ஒரு பெண் ஆடையால் மதிப்பிடப்படுவது என்பது ரொம்பவே கவலைக்குரிய விஷயம், ஒரு பெண்ணை ஹெம்லைன்கள் மற்றும் நெக்லைன்களின் அடிப்படையில் மதிப்பிடுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை பற்றி கவனம் செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தார்.

Also Read:துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

Continue Reading
To Top