திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பேராடிய பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் செய்தனர்.

இதில் பேராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் வெறித்தனமாக தாக்கியதில் ஒரு பெண்ணிற்கு செவித்திறன் பாதித்துள்ளது. போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரின் கபட நாடகம் வெளியாகியுள்ளது. இதனிடையே ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அதிரடிப்படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கையில் காயம்பட்டிருக்கிறது.

அப்போது இன்னொரு போலீஸ்காரர் ‘‘கண்ணாடியை உடைத்தீர்களா என்றும் சரி வாங்க பார்த்துக்கலாம், முதல்ல காயத்திற்கு மருந்து போடுங்கள்’’ என்கிறார். முன்னதாக, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய  போலீஸ் அதிகாரி ஒருவர், போராட்டக்காரர்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததனாலேயே தடியடிக்கு உத்தரவிடப்பட்டது என கூறி இருந்தார். தற்போது,  போலீசாரே அடித்து நொறுக்கிவிட்டு பொதுமக்கள் தாக்கியதாக நாடகமாடியுள்ளனர்.

போலீசார் திட்டமிட்டு வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே இப்படி இழிவான செயல்களில் ஈடுபடுவது வெட்ககேடானது என்று மக்கள் கூறுகிறார்கள்.

https://www.facebook.com/Ammavasa/posts/1400463139990527