சாம் ஆண்டன்

Sam Anton

இவரை ஜி வி பிரகாஷின் ஆஸ்தான இயக்குனர் என்று கூட சொல்லி விடலாம். அந்தளவுக்கு ஜி வி பிரகாஷின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றதும் இவரும் ஒரு முக்கிய காரணம். இது வரை டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு படங்களை இயக்கியுள்ளார். தற்பொழுது அதர்வா – ஹன்சிகா கூட்டணியில் படத்தை இயக்கி வருகிறார்.

இரும்புத்திரை

மித்ரன் இயக்கத்தில் அர்ஜுன் – விஷால் மோதும் சைபர் குற்றம் பின்னணியில் உருவாகியுள்ள படம். டிஜிட்டல் மோசடி பேர்விழிகள் குறித்து நம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை.

irumbu thirai

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் சாம் தன் ட்விட்டரில் இப்படக்குழுவை பாராட்டியுள்ளார்.

“இரும்புத்திரை மிகவும் அரிதான படம். இன்றளவுக்கு இதுவே விஷால் அண்ணனின் சிறந்த படம். யோவ் மித்ரன் வேற லெவெலில் உள்ளது படம். ஜார்ஜ் உன் ஒளிப்பதிவில் பிரேம் தெறிக்குது. எடிட்டிங்கில் அந்தோணி கிளிச்சிட்ட. திலீப் ப்ரோவின் சண்டை தாறுமாறு. சிறந்த திரைக்கதை. இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான படம்.” என்று கூறியுள்ளார்.