fbpx
Connect with us

பா ரஞ்சித் படத்தில் கட்ட மீசை, கட்டுமஸ்தான உடலுடன் 80’s ஆர்யா.. வைரலாகும் சல்பேட்டா பரம்பரை கெட்டப்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பா ரஞ்சித் படத்தில் கட்ட மீசை, கட்டுமஸ்தான உடலுடன் 80’s ஆர்யா.. வைரலாகும் சல்பேட்டா பரம்பரை கெட்டப்

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் காலா படத்திற்கு பிறகு சில படங்களை தயாரித்த பா ரஞ்சித் தற்போது மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் ஆர்யாவை வைத்து சல்பேட்டா பரம்பரை என்ற பெயரில் அரசியல் கலந்த பாக்ஸிங் விளையாட்டு படமாக உருவாகி வருகிறது.

பா ரஞ்சித் படங்களில் பெரும்பாலும் அரசியல் கருத்துகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்த முறை விளையாட்டில் உள்ள அரசியலை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்ட முடிவு செய்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஆர்யா 80 கால கட்டங்களில் வரும் நடிகர்களை போல கட்ட மீசை கட்டுமஸ்தான உடல் என மிரட்டல் தோற்றத்தில் உள்ளார்.

ஆர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இணையதளங்களில் செம வைரலாக பரவி வருகிறது.

aariya-salpetta

aariya-salpetta

Continue Reading
To Top