Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராயின் திருமணத்துக்கு சல்மான்கானின் ரியாக்சன் இதுதானாம்.. அதுக்கும் ஒரு மனசு வேணும்!
எல்லா சினிமா துறையிலும் இணைந்து பணி புரியும் ஹீரோ- ஹீரோயின்களில் சிலர் காதல் வயப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் பாலிவுட்டில் முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி தான் சல்மான் கான்- ஐஸ்வர்யா ராய்.
இந்த நிலையில் முதன்முதலாக ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் திருமணத்தை பற்றி சல்மான்கான் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது ஐஸ்வர்யராயும், சல்மான் கானும் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு, ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து சென்றுவிட்டனர்.மேலும் ஐஸ்வர்யா ராயுடன் மீண்டும் சல்மான் கான் ஒன்று சேர விரும்பியபோது, ஐஸ்வர்யா அதை அறவே மறுத்து விட்டார்.
அதற்குப்பிறகு தான் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்தைப் பற்றி சல்மான்கான் தன்னுடைய பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து சல்மான் கான் அந்த பேட்டியில், ‘ஐஸ்வர்யா ராய் சந்தோஷமாக இருப்பதற்காக நான் வேண்டிக்கொள்கிறேன். அபிஷேக் பச்சன் போன்ற பெரிய குடும்பத்து பையனை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, ஐஸ்வர்யா ராய் பற்றி சல்மான் கான் பேசியிருக்கும் இந்த பதிவு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
