ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஒரு மன்னிப்பு கேட்டா முடியுற கதை.. இதுக்கு இத்தனை கோடி செலவு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு `ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற போது ஜெய்ப்பூர் அருகே இரண்டு அபூர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்திற்காக சல்மான் கான் இப்போது வரை பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரையில், மானை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதற்காக சல்மான் கானுக்கு 2018 ஆம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இருப்பினும், தனது influence பயன்படுத்தி சிறைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டார்.

ஆனால் இதை ஒரு சில மக்கள் விடுவதாக இல்லை. ஏன் என்றால் அந்த அறிய வகை மான், பிஷ்னாய் என்ற ஒரு இன மக்களின் கடவுளாக பாவிக்க படுகிறது. இதனால் இந்த பிரச்சனையே அப்படியே விடுவதாக இல்லை. பல முறை அந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் அந்த கும்பலின் தலைவருடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த மக்கள் கூறினார்கள்..

தன் உயிருக்கு தானே உலை வைத்த சல்மான் கான்

ஆனால் சல்மான் கான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவே இல்லை. இத்தனைக்கும் தவறு என்னவோ சல்மான் கானுடையது தான். அப்படி இருந்தும், அவர் மன்னிப்பு கேட்கவே இல்லை. இந்த நிலையில் சல்மான் கானை கொள்ள இந்த கும்பல் வெறியோடு சுற்றி திரிந்து வருகிறார்கள்.

சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வரும்போது அங்கு வைத்து அவரை கொலை செய்ய சதித்திட்டமும் தீட்டினர். அவர்கள் ஆறு பேர் பிடிபட்டுள்ளனர். வழக்கமாக சல்மான் கான் மும்பைக்கு வெளியில் பன்வெலில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு அங்கு செல்வதையே நிறுத்திவிட்டார் சல்மான் கான்.

இப்படி இருக்க குண்டு துளைக்காத கார், bracelet என்று பல கொடிகள் சிலவழித்து வாங்கி வைத்திருக்கிறார். ஒரு மன்னிப்பு கேட்டால் முடியும் பிரச்சனை. இதற்க்கு இவ்வளவு கோடி செலவழித்து, தன் உயிரை கையில் பிடித்து சுற்ற வேண்டுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News