Tamil Cinema News | சினிமா செய்திகள்
சல்மான் கான் மீது அடுத்த புகார்.. இந்த முறையும் எஸ்கேப் ஆவாரா
சல்மான் கான் வடமாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது தபாங் 3 எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு வடமாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது தபாங் 3 எனும் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் வேகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது சல்மான் கான் மீது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தின் மகேஷ்வர் பகுதியில் நர்மதை ஆற்றங்கரையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு காவல்துறையினர் நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு மட்டும்தான் அனுமதி கொடுத்துள்ளோம் மீறினால் கொடுத்த அனுமதியை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மகேஸ்வர் பகுதி எம்.எல்.ஏ விடம் இந்த சிலை சேதத்தை பற்றி கேட்டபோது. நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது. இந்த மகேஸ்வர் பகுதியில் உள்ள சுற்றுலா தளம் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகத்தான். தற்போது நடைபெற்றுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
