இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஆனாலே வெற்றி படங்களாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய படங்கள் சர்வசாதாரணமாக ரூ.200 கோடி முதல் ரூ.500 கோடி வரை வசூலாகி வருகிறது. பாகுபலி, கபாலி போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள். அதற்கு முக்கிய காரணம், இந்திய படங்களின் உலகளாவிய வியாபாரம்.

அதிகம் படித்தவை:  இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் லைக்குகளை பெற்ற சல்மான் கானின் பாரத் பட போட்டோ.

இந்நிலையில் கடந்த ரம்ஜான் தினத்தில் வெளியாகிய சல்மான்கானின் சுல்தான் திரைப்படம் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து சாதனை செய்துள்ளது. ஏற்கனவே சல்மான்கானின் பாஜ்ராங்கி பைஜான்’ ரூ.300 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போது ‘சுல்தானும்’ ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

அதிகம் படித்தவை:  நான் ஈ இரண்டாம் பாகத்தில் சல்மான்கான் - சொல்கிறார் ராஜமௌலி தந்தை

இதேபோல் இந்த படத்தின் நாயகி அனுஷ்காசர்மாவுக்கும் இது இரண்டாவது ரூ.300 கோடி வசூல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமீர்கானுடன் அனுஷ்கா நடித்த ‘பிகே’ ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..