பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் சல்மான் கான். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொலைக்காட்சி பிரபலம் என்று சிறந்து விளங்கும் சல்மான் கான் பல ஹீரோயின்களுடன் இணைந்து கிசுகிசுவில் அடிபட்டார். இந்நிலையில் ரோமானியா நாட்டின் லுலியா வந்தூரை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பால்வுட்டில் செய்தி வெளியானது.

அப்படியிருக்கும் போது தற்போது அவர் லுலியாவை ரகசிய திருமணம் செய்து கொண்டார் எனவும், அவருக்காக மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் இருக்கும் தனது வீட்டருகிலேயே வீடு பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக வீட்டு புரோக்கரிடம் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டை பார்க்கும் படியும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக 1500 சதுட அடியில் ஒரு வீடும், ரூ.25 முதல் ரூ.30 கோடி வரையில் உள்ள ஒரு வீடும், மும்பையின் சாகர் ரேஷ்ம் பகுதியில் உள்ள ஜிவேஷ் டெரஸ், பல அடுக்குமாடி கொண்ட அபார்ட்மென்டும் பார்த்துள்ளதாகவும் தெரிகிறது. இதில், எது பிடித்திருக்கிறதோ அதனை லுலியாவுக்காக வாங்கும் ஐடியாவில் இருக்கிறாராம். தற்போது லுலியாவின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.