fbpx
Connect with us

Cinemapettai

நான் ஈ இரண்டாம் பாகத்தில் சல்மான்கான் – சொல்கிறார் ராஜமௌலி தந்தை

நான் ஈ இரண்டாம் பாகத்தில் சல்மான்கான் – சொல்கிறார் ராஜமௌலி தந்தை

salman-khan-naan-eeசென்னையில் உள்ள பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரியில் மாதம்தோறும் ஒரு திரைப்பட வல்லுநர் மாணவர்களோடு கலந்துரையாடுவது வழக்கம்.

அவ்வாறு மாணவர்களோடு கலந்துரையாட இன்று சென்னை வந்திருந்தார் ‘நான் ஈ’, ‘பாகுபலி’ உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் ராஜமெளலியின் தந்தை ஆவார்.

திரையுலகில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ‘ஈகா’ தொடர்பான கேள்வி கேட்கப்பட்டபோது, “ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஈ.டி’ (ET) என்ற படத்தைப் பார்த்தேன். அப்போது ஏன் நாம் இதைப் போல ஒரு படம் பண்ணக்கூடாது என்ற எண்ணம் வந்தது. அப்படித் தான் நான் ‘ஈகா’ கதையை தயார் செய்தேன்.

மேலும், அக்கதைக்கு திட்டமிட்ட பொருட்செலவை விட அதிகமானது உண்மை தான். தற்போது ‘ஈகா’ 2ம் பாகத்தில் நடிக்க சல்மான்கான் சம்மதம் தெரிவித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

‘ஈகா 2’ படத்தை ராஜமெளலி இயக்கப் போகிறாரா, யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தையும் அவர் தன்னுடைய பேச்சில் குறிப்பிடவில்லை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top