சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57′. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57′ படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சல்மான் கானின் `டியூப் லைட்’ படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தையும் அதே நாளில் வெளியிட முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.