செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பேசாம சல்மான் கானையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்.. சல்மான் கான் என்ன சொன்னார் தெரியுமா?

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். சல்மான் கானுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால் சல்மான் தொடர்ந்து அவரை காதலித்து தான் வந்தார். பல முறை உறவை சரி செய்யவும் முயற்சித்தார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய், பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்குள் பிரச்சனை, இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மேலும் பலர், பேசாமல் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானையே திருமணம் செய்திருக்கலாம் என்றும் தற்போது கமெண்ட் செய்து வருகினறனர்.

அதற்க்கு காரணம் சல்மான் கான் பேசிய ஒரு விஷயம் தான். அதுவும் இப்போது, இல்லை பல வருடங்களுக்கு முன்பு சல்மான் கான் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வர, அதை பார்த்து, பேசாமல் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானையே திருமணம் செய்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

சல்மான் கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஐஸ்வர்யா ராய் திருமணம் நடந்த புதுசில், சல்மான் கான் கொடுத்த பேட்டியில், அவர், “அமைதியாக இருப்பது தான் நல்லது. அவர் இன்னொருவரின் மனைவி . பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறார். அவர் அபிஷேக்கை திருமணம் செய்து கொண்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அபிஷேக் ஒரு Great Guy.”

“இதை தான் எந்த ஒரு முன்னாள் காதலரும் விரும்புவான். நட்பு முறிந்ததும் அவர் நாம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டும் என நினைப்பது இல்லை. அந்த நபர் நாம் இல்லாமலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே நினைப்போம். அதில் ஒரு சுயநலமான காரணமும் இருக்கிறது. அவர் சந்தோஷமாக இருந்தால் நமக்கு குற்ற உணர்வு இருக்காது” என்றார்.

- Advertisement -

Trending News