fbpx
Connect with us

உடலளவில் காயப்படுத்தியதால் பிரபலத்தின் காதலை முறித்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. அதிர்ச்சியான சம்பவம்!

aishwarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடலளவில் காயப்படுத்தியதால் பிரபலத்தின் காதலை முறித்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. அதிர்ச்சியான சம்பவம்!

இந்திய சினிமாவில் மிகவும் புகழ் வாய்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவரும் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் காதலில் விழுந்தனர்.

மேலும் இந்தியாவில் ஹாட் கப்பில்ஸ் என்ற பெயருடன் சுற்றித்திரிந்த சல்மான் கான்- ஐஸ்வர்யா ராய் ஜோடி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘யாரோ கண்ணு வச்சது போல’ திடீரென பிரிந்து சென்றனர்.

அதற்கான காரணமாக ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது சல்மான் கான் ஐஸ்வர்யாராயை உடலளவிலும், மனதளவிலும் தவறான முறையில் பயன்படுத்தியதற்காக தான் அவரை விட்டு பிரிந்தாராம் ஐஸ்வர்யா. அதற்குப் பிறகு ஐஸ்வர்யாராய் கொடுத்த பேட்டியில் இனி அவர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார் .

அதன்பிறகு ‘பிரைட்  அண்ட்  பிரீஜஸ்டிஸ்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தபோது, வெகுவிரைவில் ஐஸ்வர்யா சல்மானுடன் நடிக்க விருக்கிறார் என்ற வதந்தி பரவியது.

இதனை அடுத்து ஐஸ்வர்யா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  செய்தியாளர்களிடம், ‘சல்மான்கானுடன் நான் இணையப் போகிறேன் என்பது முற்றிலும் தேவை இல்லாத கேள்வி, நான் ஒரு முடிவை எடுத்த பின்பு அதில் இருந்து பின்வாங்கும் இயல்பு கொண்ட பெண்ணல்ல. இனி இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கடுமையாக பேசியிருந்தார்.

இந்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த காரணத்தை கேட்ட ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue Reading
To Top