Tamil Cinema News | சினிமா செய்திகள்
சல்மான் கானுக்கு மிகவும் பிடித்த விஜய்யின் படங்கள் எது தெரியுமா?
Published on
பாலிவுட்டின் பாஷா சல்மான் கான். பல வருடங்களாக பாக்ஸ் ஆபிஸ் ஜாம்பவானாக இருப்பவர். இவர் நடிப்பில் தபாங் 3 வெளியாக உள்ளது. இப்படம் ஹிந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் டிசம்பர் 20 ரிலீசாகிறது.
இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் பெற்றுள்ளார். அதன் காரணமாகவே சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ பட டீசரையும் வெளியிட்டார். மேலும் சமீபத்தில் தன் ரசிகர்களுடன் வீடியோ காண்பரனஸ் வடிவில் உரையாடினார்.
அப்பொழுது ரஜினிகாந்த், விக்ரம், அஜித், விஜய் படங்கள் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறினார். மேலும் விஜய்யின் திருப்பாச்சி மற்றும் தெறி தனது பாவரிட் எனவும் தெரிவித்தார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்கா நடித்துள்ளார். ஆக்ஷ்ன் – நகைச்சுவை கலவையில் உருவாகியுள்ள படமே தபாங்
