நடிகர் துல்கர் தற்போது சோலோ படத்தின் நடித்து வருகிறார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இவரின் மனைவி அமல்-க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்பாவான சந்தோசத்தில் துல்கர் அதை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார்.

தற்போது அக்குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என பெயர் சூட்டியுள்ளனர். துல்கர் அனைவருக்கும் கிரீட்டிங் கார்டு கொடுத்து விருந்தளித்துள்ளார்.

தற்போது கிரீட்டிங் கார்டு போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.