fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சின்னத்தம்பி படத்திற்காக பிரபு, குஷ்பு வாங்கிய சம்பளம்.. பிரம்மாண்ட வசூலுக்கு கிடைத்த சொற்ப காசு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சின்னத்தம்பி படத்திற்காக பிரபு, குஷ்பு வாங்கிய சம்பளம்.. பிரம்மாண்ட வசூலுக்கு கிடைத்த சொற்ப காசு

சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. பி வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி பலர் நடிப்பில் 1991இல் சின்னதம்பி படம் வெளியானது. இப்படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

மேலும், சின்னதம்பி படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் பிரபு குழந்தைத்தனமாக ஒரு வெள்ளந்தியான மனிதனாக நடித்திருந்தார்.

அண்ணன் தங்கை பாசம், காதல் என அனைத்தும் கலந்த ஒரு செண்டிமெண்ட் படமாக இப்படம் அமைந்திருந்தது. மேலும் பிரபு மற்றும் குஷ்புவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக சின்னதம்பி அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

சின்னத்தம்பி படம் வெளியான போது பிரபு மற்றும் குஷ்பூ இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகளும் வெளியாகியிருந்தது. அவ்வாறு இப்படத்தில் அவர்களுடைய நடிப்பு பலராலும் கவரப்பட்டு இருந்தது. மேலும் சமீபத்தில் பிரபு மற்றும் குஷ்பு இருவருமே உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மெலிந்து காணப்பட்டனர்.

அப்போது சின்னத்தம்பி படத்தில் இடம் பெற்றது போல பிரபுவும், குஷ்புவும் மாறியுள்ளார்கள் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. மேலும் சின்னத்தம்பி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இவர்கள் உடல் எடையை குறைத்தார்கள் என்ற செய்திகளும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு பிரபு மற்றும் குஷ்பு வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர், நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் சின்னதம்பி போன்ற படம் மீண்டும் தமிழ் சினிமாவில் தெளிவாகவில்லை. அப்பேற்பட்ட படத்தில் பிரபுக்கு 11 லட்சமும், குஷ்புக்கு 4 லட்சமும் சம்பளமாக கொடுக்கப்பட்டிருந்தது.

Continue Reading
To Top