Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-nelson

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் ரஜினி, நெல்சன் கூட்டணி வாங்கும் சம்பளம்.. வசூலை நம்பி வாரிக்கொடுக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அதைத் தொடர்ந்து இவர் மீண்டும் சன் பிக்சர்ஸ்க்காக சூப்பர் ஸ்டாரை இயக்க இருக்கிறார். இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நெல்சன் இந்த திரைப்படத்தில் எந்த தவறும் செய்துவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் இருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக ரஜினி மற்றும் நெல்சன் இருவரும் வாங்கும் சம்பளம் பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்தத் திரைப்படத்திற்காக ரஜினி கிட்டத்தட்ட 151 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தை விட அதிகமாம். அதேபோன்று நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயித்துள்ளது. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பீஸ்ட திரைப்படம் சொதப்பல்களை சந்தித்ததற்கு நெல்சன் தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படியிருக்கும்போது சன் பிக்சர்ஸ் மீண்டும் அவரை நம்பி இவ்வளவு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இருப்பினும் சூப்பர் ஸ்டார் படம் என்பதால் கண்டிப்பாக மிகப் பெரிய அளவில் லாபம் இருக்கும் என்ற நோக்கில்தான் சன் பிக்சர்ஸ் தற்போது இருவருக்கும் இவ்வளவு சம்பளத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தற்போது நெல்சனு க்கு இந்த படம் வாழ்வா, சாவா என்னும் போராட்டம் தான். அந்த வகையில் அவர் இந்த படத்தில் விட்டதை பிடிக்க அதிக முயற்சி எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top