Connect with us
Cinemapettai

Cinemapettai

kollywood-salary

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்.. படம் வசூல் பண்ணுதோ இல்லையோ இவங்க நல்லா பண்றாங்க

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளனர்.  அது மட்டுமில்லாமல்  தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களின் பட ரிலீஸ் தேதியை ஒரு திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் டாப் 10  நடிகர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்பது பற்றியும் ஒரு லிஸ்ட் வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலும் கோலிவுட்டில் டாப் 10  நடிகர்கள் மற்றும் அவர்களின் சம்பள லிஸ்ட் இதோ:

ரஜினிகாந்த்: கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் எப்போதும் கெத்தாக முதலில் இருப்பது ரஜினிகாந்த் தான். இவருக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு மட்டும் ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

விஜய்: தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி உச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தென்னிந்திய திரையுலகையே திகைக்க வைப்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் இவர் ஒரு படத்திற்கு 60 முதல் 80 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

அஜித்: கோலிவுட்டில் மூன்றாவது இடத்தில் தல அஜித் இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்கள்  வெறித்தனமாய் காத்திருக்கின்றனர். மேலும் வெற்றி-தோல்வி ஆகியவற்றை சரிசமமாக கண்டு, தற்போது இமாலய வெற்றி பெற்றிருக்கும் தல அஜித், ஒரு படத்திற்கு ரூபாய் 55 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

கமல் ஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்ததோடு, ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 40 கோடி  சம்பளம் பெறுகிறார்  என்று சொல்லப்படுகிறது.

சூர்யா: சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டதோடு, சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. சூர்யா ஒரு படத்திற்கு ரூபாய் 25 முதல் 30 கோடி வரை சம்பளம் பெறுவதால் இந்தப் பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறார்.

விக்ரம்: கோலிவுட்டில் டாப் நடிகர்களின் பட்டியலில் 6வது இடத்தை பிடித்திருக்கும் விக்ரம், 54 வயதிலும் சீறும் சிங்கம் போல் சிக்ஸ் பேக் உடற்கட்டோடு, அனைவரையும் மிரள வைத்துள்ளார். மேலும் இவர் ரூபாய் 25 கோடியை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தனுஷ்: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அதற்கேற்றார்போல் தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் தனுஷ். இவர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என சினிமா துறையில் உச்சத்தை  அடைந்துவிட்டாலும் இன்றளவும் சிறிதளவு தலைகணம்  கூட காட்டாமல் இருந்து வருகிறார். இவர் சம்பளம் ஒரு படத்திற்கு 22 கோடி என்பதால் இந்தப் பட்டியலில்  தனுஷ் 7வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், தற்போது கோலிவுட்டில் முன்னணி கதாநாயனாக திகழ்ந்து வருகிறார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது கடின உழைப்பு தான். இவருடைய சம்பளம் ரூபாய் 20 கோடி முதல் 30 கோடி வரை  என்று சொல்லப்படுகிறது. இதனால் இவர் இந்தப் பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.

விஜய்சேதுபதி: கோலிவுட்டில் ‘மக்கள் செல்வன்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக சுற்றிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 8 கோடி முதல் 10 கோடி வரை என்று கூறப்படுகிறது.

கார்த்தி: கார்த்தி தற்போது சுதா கொங்காரவின் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கார்த்தி ஒரு படத்திற்கு, 6 முதல் 8 கோடி சம்பளம் வாங்குவதால் இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

tamil-cinema-actors

tamil-cinema-actors

இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top