90களில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் சம்பள பட்டியல்.. கமலை விட 3 மடங்கு அதிகம் வாங்கிய சூப்பர் ஸ்டார்

கோலிவுட்டில் இருக்கும் முன்னணி பிரபலங்கள் தற்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்பே 90களில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் சம்பள விவரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகனை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த்: 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படம் தான் ரஜினி நடித்த முதல் திரைப்படமாகும். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். இவர் தமிழ் திரை உலகில் மட்டுமின்றி மற்ற மொழிகளான தெலுங்கு,கன்னடம் மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துசாதனை படைத்துள்ளார். தமிழில் மட்டும் 110 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிசயபிறவி, தர்மதுரை, தளபதி, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா முத்து போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தர்மதுரை படத்தின் ரஜினி பேசிய ‘நல்லவனா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது’ என்ற மாஸ் டயலாக் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படி கொடிகட்டி பறந்த சூப்பர் ஸ்டார் 90களில் ஒரு படத்தில் நடிப்பதற்கு மட்டும் 60 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read: உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவிற்கு.. உடல்நிலை சரியான உடனே விஜய் சேதுபதியை தேடிச் சென்ற கமல்

கமல்ஹாசன்:தனது நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு கதாநாயகனாக வித்தியாச வித்தியாசமான வேடங்களில் நடிப்பதன் மூலம் உலக நாயகனாகவே மாறினார் இதற்காக கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகருக்கான என்ற முறையில் 4 முறை தேசிய விருதுகளும் 10 முறை தமிழக அரசு திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார். 90களில் இவரின் படத்திற்கு 20 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

விஜயகாந்த்: பிரபல நடிகர் விஜயகாந்த் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும் கூட இவர் சுமார் 100 திரைப்படங்களில் நடித்துள்ளார். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களால் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற சூப்பர் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்தார். விஜயகாந்த் பொதுவாக தனது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த கருத்துக்களை அடிப்படையாக கொண்டகதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 90களில்  தனது படத்திற்கு 20 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read: என்றுமே கிங் மேக்கர் நீங்க மட்டும் தான்.. ரஜினி இப்பவும் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கான காரணம் இதுதான்

சத்யராஜ்: சத்யராஜ் கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். எதிர்மறையான நடிகராக தன் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின் கதாநாயகனாக முன்னேறும் அளவிற்கு தனது நடிப்புத் திறமையால் திரைத்துறையில் வளர்ச்சி கண்டார்.வேதம்புதிது, அமைதிப்படை, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய படங்களில் முன்னணி நடிப்பு மூலம் வெற்றியை பெற்றார். இவரது படத்திற்கு 20 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

பிரபு: சிவாஜியின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபு தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சின்னத்தம்பி, செந்தமிழ் பாட்டு, பசும்பொன், பரம்பரை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இப்பொழுது நடிகர்களுடன் திரையில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி தனது நடிப்பு திறனை இன்றும் நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார். சின்னத்தம்பி படத்தில் பிரபுவின் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது. இவர் தனது படத்திற்கு 15 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read: விநியோகஸ்தர்கள் தலையில் துண்டை போட்ட 5 படங்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கு இந்த நிலைமையா?

இவ்வாறு இந்த ஐந்து ஹீரோக்களும் இப்பொழுது வரை தங்களது மார்க்கெட்டை இழக்காமல் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளனர். அத்துடன் இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் இன்று வரை ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்