இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் ! பிசிசிஐ அறிவிப்பு ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் ! பிசிசிஐ அறிவிப்பு !

News | செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் ! பிசிசிஐ அறிவிப்பு !

இந்திய கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான கிரிக்கெட் வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்து உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் குழுவிடம் வேண்டுகோள் பல முறை வைத்தனர்.

RaviShastri

RaviShastri

இதுவரை ஏ பி சி ஆகிய 3 பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக இந்த ஆண்டு ஏ+ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஏ+ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7கோடி ஊதியமும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் ரூ.3 கோடியும், சி பிரிவில் ஒரு கோடியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆண்கள் அணி வீரர்கள் விவரம்:

‘ஏ+’

விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.

Rohit-Sharma-Shikhar-Dhawan-and-Virat-Kohli

‘ஏ’

எம்.எஸ்.டோனி, ரவிந்திர ஜடேஜா, விரிதிமான் சஹா, முரளி விஜய், செட்டேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே, ரவிசந்திரன் அஷ்வின் .

dhoni-jadeja

‘பி’ கிரேட்

உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், யூவெந்திர சஹால், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் .

india

india

‘சி’

சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஆக்ஸார் படேல், கருண் நாயர், பார்திவ் படேல், ஜெயந்த் யாதவ் .

சினிமாபேட்டை கிசு கிசு

மொகமது ஷமி இதில் எந்தப்பிரிவிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொகமது ஷமி மீது அவர் மனைவி புகார் அளித்துள்ளதால் அவர் இந்த ஒப்பந்தப் பட்டிய்லில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட் பொறுத்தவரை மூன்று பிரிவுகள் தான். இந்த முறை புதியதாக சி பிரிவை சேர்த்துள்ளனர்

cricket

‘ஏ’ கிரேட்
மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி, ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா

‘பி’ கிரேட்
பூனம் யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ்வரி கயக்வாத், எக்தா பிஷ்ட், ஷிகா பாண்டே, தீப்தி சர்மா

india womens cricket

‘சி’ கிரேட்
மன்சி ஜோஷி, அனுஜா பாட்டில், மோனா மெஷ்ராம், நுசாட் பர்வீன், சுஷ்மா வெர்மா, பூனம் ராவத், ஜெமிமா ரொட்ரிகஸ், பூஜா வஸ்திரகர், தனியா பாட்டியா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top