ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம்.. சூர்யா இப்படி ஒரு ரசிகனா!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல தரப்பிலிருந்தும் விக்ரம் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் விக்ரம் படம் வெளியான முதல் நாளே வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதே போல் விக்ரம் படத்தின் டிரைலரிலும் சூர்யாவின் காட்சி இடம் பெற்றிருந்தது.

விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டு காலங்களில் முதல் முறையாக சூர்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் சூர்யா இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் இப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே சூர்யாவின் காட்சி இடம் பெற்றிருந்ததால் அவருக்கு இரண்டிலிருந்து மூன்று கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சூர்யாவுக்கு பல வருடங்களாக கமலுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் விக்ரம் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் சூர்யா நடித்து கொடுத்துள்ளார். மேலும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், கமல் அண்ணா உங்களுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நினைவானது.

மேலும், இதை நிறைவேற்றிய லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி என சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவின் தந்தை சிவக்குமாரும் உலகநாயகன் கமலஹாசனும் சகோதரர்களாக பழகி வருகின்றனர். அதேபோல் தற்போது சூர்யாவும் கமலை தனது அண்ணன் ஆகவே பாவிக்கிறார். மேலும் கமலின் தீவிர ரசிகராகவும் சூர்யா உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்