புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

லப்பர் பந்து நடிகர்கள் வாங்கிய சம்பளம் .. ஹரிஷ்க்கு அள்ளி கொடுத்து தினேஷுக்கு செய்த ஓரவஞ்சனை

5.75 கோடிகளில் எடுக்கப்பட்டலப்பர்பந்து படம் இன்று 15 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம் பார்த்து அசத்தியுள்ளது. இரண்டு ஹீரோக்களுக்கு இந்த படம் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது. படம் ரிலீசாகி 10 நாட்களாகியும் எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரது கேரியரையும் இந்த படம் தூக்கி நிறுத்தி உள்ளது. இயக்குனர் தமிழ் குமரன் பச்சமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடித்த ஆர்ட்டிஸ்ட்களின் சம்பள விவரம் இப்பொழுது வெளியாகி உள்ளது..

ஹரிஷ்க்கு அள்ளி கொடுத்து தினேஷுக்கு செய்த ஓரவஞ்சனை

ஹரிஷ் கல்யாண்: 2010 சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் நடித்த படம் “பார்க்கிங்”. அது மட்டும் தான் ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அதன் பின்னர் இப்பொழுது லப்பர் பந்து படம் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்திற்கு ஹரிஷ் கல்யாண் 70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

அட்டகத்தி தினேஷ்: அட்டகத்தி தினேஷ் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் 40 லட்சம். ஆனால் இப்பொழுது படம் ஹிட்டான பிறகு தயாரிப்பாளர் அவருக்கு என்ன கொடுத்தார் என்பது தெரியவில்லை. இதற்கு முன்பு அட்டகத்தி தினேஷ் ஒரு படத்திற்கு வாங்கி வந்த சம்பளம் 15 லட்சங்கள் தான்.

பால சரவணன் மற்றும் காளி வெங்கட் : ஹரிஷ் கல்யாணின் நண்பனாக காத்தாடி கதாபாத்திரத்தில் நடித்த பால சரவணனுக்கும், கருப்பையா கதாபாத்திரத்தில் நடித்த காளி வெங்கட்டுக்கும் 15 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். இருவரும் இதற்கு முன்னர் 8 முதல் 10 லட்சம் வாங்கி வந்தனர்.

சுவாசிக்கா யசோதா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி: இந்த படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவி மற்றும் மகளாக நடித்த யசோதாவிற்கும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கும் 20 லட்சங்கள் வரை சம்பளம் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவர் கதாபாத்திரமும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது

- Advertisement -spot_img

Trending News