Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜனனி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்.. புறம் பேசியதற்கு அள்ளிக் கொடுத்த விஜய் டிவி

பிக் பாஸ் வீட்டில் ஜனனி வாங்கிய மொத்த சம்பளம்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 10 வாரங்களை கடந்துள்ளது. இதில் அசீம், விக்ரமன், ஷிவின், தனலட்சுமி ஆகியோர் பைனல் லிஸ்ட் வரை செல்வார்கள் என்று ரசிகர்கள் ஆதரவை வைத்து தெரிகிறது. மீதமுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஏடிகே வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இலங்கையைச் சேர்ந்த ஜனனிக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பேர் கிடைத்தது. பிக் பாஸ் தொடங்கிய போது இவருக்கு ஆர்மி எல்லாம் ரசிகர்கள் தொடங்கினர்.

Also Read : பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் நடக்கும் சாதிய அடக்குமுறை.. கண்டுகொள்ளாமல் இருக்கும் கமல்

ஆனால் அதன் பின்பு ரசிகர்களுக்கு அவருடைய நடவடிக்கை எரிச்சலை ஏற்படுத்தியது. அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவதையே வேலையாக வைத்திருந்தார். மேலும் ஒருமுறை ரக்ஷிதாவை பற்றி எருமை மாடு உடன் ஒப்பிட்டது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த வாரம் ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் புறம் பேசியதற்கு லட்சங்களை அள்ளிக் கொடுத்துள்ளது விஜய் டிவி. அதாவது ஜனனியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

Also Read : பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு நடக்கும் அநீதி.. தட்டிக் கேட்பாரா ஆண்டவர்

அதாவது பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் ஜனனி தாக்குப்பிடித்துள்ளார். ஆகையால் 17 லட்சம் 50 ஆயிரம் சம்பளமாக ஜனனி பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் பயணித்ததற்கு வாங்கியுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் சும்மாவே இருந்ததற்கு பிக் பாஸ் இவ்வளவு வாரி வழங்கியுள்ளது என அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த அடுத்த வாரங்களில் மணிகண்டன், ஏடிகே, அமுதவாணன், மைனா நந்தினி போன்றவர்கள் அடுத்தடுத்து வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

Continue Reading
To Top