பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற காயத்ரி, ஜூலி மற்றும் சக்தி ஆகியோர் முக்கிய காரணம்.ஜூலியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பே ரசிகர்கள் வெளியேற்றப்பட்டார். ஆனால் காயத்ரியையும், சக்தியையும் வெளியேற்ற முடியவில்லை.

காரணம் அவர்கள் இருவரையும் இதுவரை யாரும் நாமினேட் செய்யவில்லை.கடந்த வாரம் அதற்கான சான்ஸ் ரசிகர்களுக்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர்.ரசிகர்களும் சக்தி, காயத்ரியை வெளியேற்ற முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். இதில் காயத்ரி பிக்பாசின் வித்தியாசமான விதிமுறையால் தப்பினார்.

ஆனால் சக்தி வெளியேற்றப்பட்டார். ஆனாலும் சக்தி 50 நாட்களை பிக்பாஸ் வீட்டில் கழித்து விட்டார்.பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதன்படி சக்திக்கு பேசப்பட்ட சம்பளத்தின் படி ரூ 15 லட்சம் வரை சம்பளமாக வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் தரப்பில் வைல்ட் கார்டு ரவுண்ட் வரை பொறுத்திருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. அப்படி வைல்ட் கார்டு ரவுண்டில் உள்ளே வந்தால் முதல் பரிசை வெல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.