நடிகர் சந்தானம் காமெடிக்கு முழுக்கு போட்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து சில படங்களையும் அதிரடியாக களமிறக்கினார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.

ஒவ்வொரு படத்திலும் அவர் காமெடியே அதிகமாக ரசிக்கப்பட்டது. லொள்ளு சபா இயக்குனரான ராம் பாலா இயக்கத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சுமாராக வசூல் வெற்றியும் செய்தது.

sakkapodu podu raja

அதனை தொடர்ந்து தற்போது தனது ஆஸ்தான கூட்டணியான VTV கணேஷன், சிம்புவுடன் மீண்டும் சக்க போடு போடுராஜா படத்தில் இணைந்துள்ளார் சந்தானம்.

இப்படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

இந்த படத்தை VTV கணேஷன் தனது VTV productions மூலம் தயாரிக்கிறார்.

முதன் முறையாக இசையமைப்பாளராக இந்த படத்தின் மூலம் களமிறங்குகிறார் சிம்பு.

santhanam

முதலில் இப்படத்திற்கு இசையமைக்க A.R ரகுமானிடம் கேட்டார்கள், அவர் மறுக்கவே அனிருத், ஹாரிஸ் என்று ஒவ்வொரிடமும் விண்ணப்பம் சென்றது. ஆனால் இறுதியாக சந்தானம் சிம்புதான் இசையமைக்க உள்ளார் என தன் ட்விட்டரில் அறிவித்தார். அதுவும் எப்படி “எனது காட் பாதர்ரும் சிறந்த மனிதருமான சிம்பு தனது முதல் இசையமைப்பாளர் பயணத்தை எனது படத்தில் துவங்க உள்ளார்” என அறிவித்தார்.

இந்த படத்தின் காமெடி ரோலில் விவேக் நடிக்கிறார். முன்பே இவர் சந்தானமுடன் வீராப்பு படத்தில் நடித்துள்ளார். அதன் பின் வந்த சிங்கம் 2 படத்தில் சந்தானம் நடித்திருந்தாலும், விவேக் அவர்கள் சந்தானம் வரும் காட்சியில் தான் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் இருவரும் சேர்ந்து வருமாறு காட்சிகள் அந்த படத்தில் எடுக்கப்படவில்லை.

வழக்கமான சந்தானத்தின் லொள்ளு சபா நண்பர்கள் யாருமில்லாமல் புது நண்பர்கள் கூட்டணி இந்த படத்தில் காமெடி செய்ய வருகிறது.

Santhanam

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த மருத்துவரான சேது அவர்கள் இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் நாயகி வைபவி ஷாந்தில்யா, இவர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மராத்திய மொழிப்படங்களில் அறிமுகமான இவர் இதுவரை மராத்தி மட்டுமல்லாது அரபிக், தமிழ் கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது.

படத்தில் சம்பத், ரோபோ சங்கர், சஞ்சனா சிங் போன்றோரும் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

டிரைலர் வீடியோவை சந்தானமே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுவரை இந்த வீடியோவை 23 லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். வெளியான 12 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

கோர்ட் கேஸ் என்று அல்லல் பட்டு வரும் சந்தானத்திற்கு இந்த படம் வெற்றிப்படமாய் அமையுமா என்று பொறுத்திருந்து பார்போம்.