fbpx
Connect with us

Cinemapettai

கனா படத்தில் நடிக்க வேண்டியது இந்த நடிகைதானம்.. இத கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருந்தால் நடித்திருக்கலாம் என புலம்பல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கனா படத்தில் நடிக்க வேண்டியது இந்த நடிகைதானம்.. இத கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருந்தால் நடித்திருக்கலாம் என புலம்பல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவர் தந்தையாக சத்யராஜ் நடித்து.. தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படம். இப்படத்தில் தான் நடிக்க முடியுமானால் போனது பற்றி பாலிவுட் நடிகை பிரபல இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

சையாமி க்ஹெர் (Saiyami Kher) – 28 வயது அழகிய ராட்சசி. டஸ்க்கியாகவும், க்யூட்டாகவும் இருக்கும் இவர்  ஒரு தெலுங்கு, ஹிந்தி, மராத்தி படங்களில் நடித்துள்ளார்.

எனினும் இந்த லாக் டவுன் நேரத்தில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இவர் நடித்த choked படம் நெட் பிலிக்சில் வெளியாகி வைரல் ஹிட் ஆனது. அப்படத்தில் demonetisaton நடக்கும் நேரத்தில் பேங்க் அதிகாரி ரோலில் நடித்து அசத்தி இருந்தார். பலரும் இவரை பாராட்டி வருகின்றனர், புதிய வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது.

saiyami kher

இந்நிலையில் கனா படத்தில் நடிக்க இவரை தான் முதலில் அழைத்தார்களாம், எனினும் வேறு பட வாய்ப்பு இருந்த காரணத்தால் நடிக்க முடியாமல் போக,  ஐஸ்வர்யாவுக்கு அந்த வேடம் சென்றது. அந்த நேரத்தில் நடிக்க வேண்டிய டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருந்தால் கனா பட வாய்ப்பை பெற்று நடித்திருப்பேன் எனவும், சிறப்பான படம் எனவும் தன் பேட்டியில் சொல்லியுள்ளார்.

விரைவில் தமிழ் படத்தில் தோன்ற சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள் . கோலிவுட் ஐஸ் வைட்டிங்.

Continue Reading
To Top