சிபிராஜ் தற்போது முன்னாடி அளவுக்கு இல்லை என்றாலும் லாபம் தரும் ஹீரோக்களில் ஒருவர் அதுவும் கொஞ்சம் சரி செய்தால் பெரிய லாபம் எடுக்கலாம்.. அந்த சரி செய்யும் வேலை சத்யராஜ் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு சைத்தான் படத்தை போட்டு காண்பித்துள்ளார்கள் அவர் நாத்திகவாதியாக இருந்தாலும் அல்லது அப்படி வெளியில் தெரிந்தாலும். அவருக்கு படம் ரொம்ப புடித்துவிட்டது. அது என்னனு பார்போம்.. . sathyaraj-sibiraj

சிபிராஜ் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாது, எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை வாய்ந்த நடிகர். இவருடைய நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், தற்போது சிபிராஜ் அடுத்தாக ‘சைத்தான்’ பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.