fbpx
Connect with us

தமிழில் வியாழக்கிழமை… தெலுங்கில் வெள்ளிக்கிழமை… சக்கை போடு போடும் சைத்தான் ரிலீஸ்!

saithan-release-in-

News | செய்திகள்

தமிழில் வியாழக்கிழமை… தெலுங்கில் வெள்ளிக்கிழமை… சக்கை போடு போடும் சைத்தான் ரிலீஸ்!

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆன்டனி நான் படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து விஜய்ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் சைத்தான். அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இந்தப்படம் நவம்பர் 18-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருப்பதாக சொல்லப்பட்டது.

இப்போது ஒரு நாள் முன்னதாக அதாவது 17-ஆம் தேதி வியாழக்கிழமை இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கமாக புதிய படங்களின் ரிலீஸ் வெள்ளிக் கிழமைகளில்தான் இருந்து வந்தது. சமீபகாலமாக வெள்ளிக் கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமைகளிலும் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

இந்த வாரம் கூட கடவுள் இருக்கான் குமாரு படம் வியாழக்கிழமை அன்றுதான் வெளியாகிறது. இந்த வரிசையில் சைத்தான் படமும் சேர உள்ளது. இந்த படத்தை தமிழகமெங்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் திட்டத்தோடு படத்துறைக்கு வந்துள்ள ஆரா சினிமாஸ் அதிபர் மகேஷ் அஜித்தைப்போலவே சாய் பாபாவின் பக்தராம். வியாழக்கிழமை என்பது சாய் பாபாவுக்கு உகந்த நாள் என்பதால் தன் படம் சம்மந்தப்பட்ட விஷயங்களை வியாழக்கிழமைகளில் செய்யச் சொல்வார் அஜித். அதை அறிந்து வைத்துள்ள ஆரா சினிமா மகேஷ், சைத்தான் படத்தையும் வியாழக்கிழமை ரிலீஸில் செய்ய இருக்கிறார். தமிழில் வியாழக்கிழமை வெளியாகும் சைத்தான் தெலுங்கில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top