தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் சாய் பல்லவி, மாரி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

Sai-Pallavi
Sai-Pallavi

கோலிவுட்டில் தற்போது இரண்டாம் பாக கதைகள் ட்ரெண்ட் அடித்துள்ளது. வெற்றி பெற்ற படங்களின் அடுத்த பாகமும் தொடர்ந்து உருவாகி வருகிறது. இப்பட்டியலில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாரி படமும் இணைந்துள்ளது. மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்துடன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தது.

இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்து இருந்தார். தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்று இருந்தனர். சென்னையில் உள்ள ஒரு லோக்கல் கேங்ஸ்டர் கதை பின்னணியில் அமைந்து இருந்தது மாரி. படம் வெளியாகி செம வரவேற்பையும் பெற்றது.

Sai-Pallavi
Sai-Pallavi

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பாலாஜி மோகனே இயக்கி வருகிறார். மாரி 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷே நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்ட சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். தனுஷுன் வில்லனாக ’உலவிரவு’ ஆல்பம் புகழ் டோவினோ தாமஸ் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்து இருப்பதாக தெரிகிறது. இந்த வருட இறுதிக்குள் படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாரி 2 படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை அடக்கமான பெண்ணாக பார்த்த சாய் பல்லவி இப்படத்தில் அராத்து ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுகுறித்த அறிவிப்பு இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.