Connect with us

Cinemapettai

அவர பாத்தாலே பயமா இருக்கு.. சாய்பல்லவியை மிரட்டிய அந்த நடிகர் யார்?

sai-pallavi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவர பாத்தாலே பயமா இருக்கு.. சாய்பல்லவியை மிரட்டிய அந்த நடிகர் யார்?

அடிப்படையில் டாக்டரான சாய்பல்லவி சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பிறகு ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் சாய்பல்லவி. மேலும் இந்த படத்தின் வெற்றி சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்ததோடு, அவரை முன்னணி நடிகையாகவும் மாற்றியது.

OTT தளத்தில் வெளியாக உள்ள ‘பாவ கதைகள்’ என்ற ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் போன்ற முன்னணி தமிழ் இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர்.

இந்தப்படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சாய் பல்லவியும் பிரகாஷ்ராஜும் ‘இரவு’ என்ற பகுதியில் நடித்துள்ளனராம். குறிப்பாக சாய்பல்லவி இந்தப் படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.

இவ்வாறிருக்க சாய் பல்லவியிடம் பிரகாஷ்ராஜுடன் நடித்த அனுபவத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘பிரகாஷ் சார் கிட்ட இயற்கையாவே அப்பாவிற்காக ஒளி இருக்கு. இதனால் அவர் செட்டுக்குள்ள நுழையிறப்ப  உண்மையான அப்பாவாவே மாறிருவாரு. அவரோட நடிப்பால என்னை மிரட்டி விட்டார்’ என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி.

prakash-raj-cinemapettai

prakash-raj-cinemapettai

அதுமட்டுமில்லாமல் சாய்பல்லவியிடம் பிரகாஷ்ராஜ் அவருடைய மருத்துவ படிப்பை பற்றி விசாரித்ததாகவும், அதை பயிற்சி செய்ய வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் சாய்.

எனவே, இவ்வாறு பிரகாஷ்ராஜை பற்றி சாய்பல்லவி புகழ்ந்து பேசி இருக்கும் இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top