வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

சாய்பல்லவின் அடுத்த அவதாரம்.. மேடையிலேயே கிரீன் சிக்னல் கொடுத்த தேசிய விருது இயக்குனர்

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் அமரன். இப்படத்தை கமலின் ராஜகமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் தயாரித்துள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. சிவாவின் 22 வது படமான இப்படம், இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அமரன் படம் ஷூட்டிங் நிறைவடைந்து, இதன் புரமோசன் பணிகள் உள் நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் நடைபெற்றன. அத்துடன் மீடியாக்கள் மற்றும் யூடியூபிலும் படக்குழு கலந்துகொண்டு புரமோசனின் ஈடுபட்டு வந்தனர். அதில் படத்தைப் பற்றியும், இப்படம் உருவான விதம், இப்படம் எடுக்க காரணம். இதெல்லாம் கமல், சிவா ஆகியோர் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் , இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிரத்னம், சினிமாவில் கற்பனைக் கதைகளை இயக்குவதைக் காட்டிலும் உண்மைக் கதைகளை இயக்குவது கடினமானது. அதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சில பேர் சினிமாவில் நடிப்பது, இயக்குவதன் மூலம் இயக்குனர்களாக வந்துவிடுகிறார்கள். நான் படிப்படியாக இயக்குனராக வந்தேன். அதேபோல் சிவகார்த்திகேயனும் திடீரென ஹீரோவாக இல்லாமல், படிப்படியாக வளர்ந்திருக்கிறார் என்றார்.

மேலும்,சாய்பல்லவி சிறந்த நடிகை, அவர் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் ரியலாக நடிப்பார். அவர் உண்மையான கேரக்டரிலேயே நடிக்கிறார். அவர் நடிக்கும் படங்களை நான் தொடர்ந்து பார்க்கிறேன். நான் அவரது ரசிகன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

சாய் பல்லவியின் கனவு மற்றும் தேசிய விருது

அதன்பின், பேசிய சாய்பல்லவி, மணிரத்னம் சாரில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு நடிக்கும் ஆசை ஏற்பட்டது. அவரை சந்திக்க மாட்டோமோ, அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்று மணிரத்னம் சாரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சினிமா கேரியல் முடிவடையும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்து, அதன் பின் பிரேமம், கனம், மாரி 2, என்.ஜி.கே, பாவ கதைகள், கார்க்கி, காதல் கதை, ஆகிய படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சாய்பல்லவி தற்போது இந்திப் படத்திலும், நடித்து வருகிறார்.

ஏற்கனவே பல முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்துள்ள சாய்பல்லவி, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் படம் பல தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில் அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிப்பதன் மூலம் சாய்பல்லவியும் தேசிய விருது பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News